மீண்டும் கனடாவை மிரட்டும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே, மற்ற நாடுகளை மிரட்டுவதை பகுதி நேர வேலையாகவே ஆக்கிக்கொண்டுள்ள ட்ரம்ப், மீண்டும் கனடாவுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
மீண்டும் கனடாவை மிரட்டும் ட்ரம்ப்
ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப், கூடுதல் வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டினார், அதைத் தொடர்ந்து வரிகளும் விதித்தார்.

இந்நிலையில், கனடாவுக்கு மீண்டும் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார் ட்ரம்ப். அதாவது, கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து Canada-U.S.-Mexico Agreement (CUSMA) என்னும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ட்ரம்ப் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியானபோது, 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
I47N1
அந்த ஒப்பந்தம் ஜூலை மாதம் 1ஆம் திகதி மீளாய்வுக்கு வர உள்ளது. இந்நிலையில், தான் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், கனடாவின் பொருளாதாரத்துக்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கியம். ஏனென்றால், அமெரிக்காவுடனான சுமார் 1.3 ட்ரில்லியன் டொலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை அந்த ஒப்பந்தம் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |