விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு மிரட்டல் விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்காவில் விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்பின் கோரிக்கை
சமீபத்திய நாட்களில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பு கடுமையான இடையூறுகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையிலேயே ட்ரம்பின் கோரிக்கையும் வெளியாகியுள்ளது. அரசாங்க முடக்கம் காரணமாக ஊதியமில்லாமல் பணியாற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், தங்கள் குடும்பத்தின் நிலைகருதி இரண்டாவது வேலைக்கு செல்வதாலையே, அவர்களால் பணிக்கு திரும்ப முடியாமல் போயுள்ளது.
விமானப் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு விமான வர்த்தகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசாங்க முடத்தின் போது 41 நாட்களும் வேலைக்கு வந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அனைவருக்கும் தலா 10,000 டொலர் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பற்றாக்குறை
ஆனால், கோரிக்கை விடுத்தும் பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்றும் மிரட்டியுள்ளார். அரசாங்க முடக்கத்திற்கு முன்பே, ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சுமார் 3,500 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
பலர் வாரத்தின் ஆறு நாட்களும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதுடன், கூடுதல் நேரம் பணியாற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே, வெளியான தரவுகளின் அடிப்படையில்,

அமெரிக்காவின் 30 பெரிய விமான நிலையங்களில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் பேர், அரசு முடக்கத்தின் போது எந்த நாளிலும் வேலைக்கு திரும்பாமல் இருந்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமை மட்டும் 2380 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 8900 விமானங்கள் தாமதமாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |