கார் தயாரிப்பாளர்களுக்கு சாதகமான முடிவெடுத்த சீனா: ஏற்றுமதி தடைகளிலிருந்து விலக்கு
கார் உற்பத்திக்கு அவசியமான கணினி சிப்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா நீக்கியுள்ளதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி பாதிக்கப்படும்
சீனாவிற்குச் சொந்தமான நெக்ஸ்பீரியா நிறுவனத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செய்யப்படும் ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளனர்.

சீனாவின் நடவடிக்கையால் ஐரோப்பாவில் உற்பத்தி பாதிக்கப்படும் என்று அஞ்சிய கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த நகர்வு நிம்மதி அளித்துள்ளது. அதே நேரத்தில், Semiconductor தொழிலில் முக்கியமான சில பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை சீனா நீக்கியுள்ளது.
அத்துடன் அமெரிக்க கப்பல்களுக்கான துறைமுக கட்டணங்கலையும் சீனா ரத்து செய்துள்ளது. இந்த நகர்வுகள் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை சுமூகமாக்கும் என்றே கூறப்படுகிறது.
அக்டோபரில், நெதர்லாந்தில் செயல்பட்டு வந்த சீன நிறுவனமான விங்டெக்கிற்குச் சொந்தமான நெக்ஸ்பீரியாவை டச்சு அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
கார்கள் மற்றும் பிற பொருட்களுக்கான Semiconductor-களின் ஐரோப்பிய விநியோகத்தைப் பாதுகாக்கவே இந்த முயற்சி. ஆனால், இதற்கு பதிலளிக்கும் வகையில் நெக்ஸ்பீரியா சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது.

ஒப்புக்கொண்ட சீனா
நெதர்லாந்தில் செயல்பட்டுவரும் நெக்ஸ்பீரியா, தங்களின் 70 சதவீத சிப்களை கடைசி கட்ட பணிகளுக்காக சீனாவிற்கு அனுப்பி வந்துள்ளது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் சீனா நெக்ஸ்பீரியா சிப்களை முடக்கியதும், உலகளாவிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற நெருக்கடி உருவானது. வோல்வோ மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் சிப் பற்றாக்குறையால் தங்கள் ஆலைகளில் தற்காலிக பணிநிறுத்தம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தன.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் சிப் இல்லாதது தங்கள் வணிகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் மரோஸ் செஃப்கோவிக் தமது சமூக ஊடகத்தில்,
நெக்ஸ்பீரியா சிப்களுக்கான ஏற்றுமதி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டதாக சனிக்கிழமை அறிவித்தார். மட்டுமின்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொருட்கள் இருந்தால், எந்தவொரு ஏற்றுமதியாளருக்கும் உரிமத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் நெதெர்லாந்தும் சீனாவும் நீடித்து நிலைக்கும் வகையில் ஒத்துழைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |