கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்
Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தண்டனை
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |