சார்லி கிர்க் படுகொலை... வெளிநாட்டவர்களை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட வலதுசாரி பிரபலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதிக்கும் வெளிநாட்டவர்களை ட்ரம்ப் நிர்வாகம் கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிய நடவடிக்கை
குறித்த படுகொலையை ஆதரிப்பதோ அல்லது கேலி செய்வதோ, இனவாத ரீதியாக சித்தரிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சிலர் இந்த நிகழ்வைப் பாராட்டுவது, நியாயப்படுத்துவது அல்லது வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனக்கு வெறுப்பூட்டுகிறது, மேலும் நமது தூதரக அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் லாண்டாவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் வெளிநாட்டவர்கள் என லாண்டாவ் யாரை அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து விளக்கப்படவில்லை. மட்டுமின்றி, நடவடிக்கை என்பது விசா நிராகரிப்பா அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றுவதா என்பது குறித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
உயரிய விருது
இதனிடையே, அமெரிக்காவின் உயரிய விருது அளிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் ஞாயிறு மாலை நேரம் வரையில் அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
31 வயதான சார்லி கிர்க் ஒற்றைத் தோட்டாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 200 கெஜ தூரத்திலிருந்து துப்பாக்கிதாரியால் சுடப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர் மாயமாகியுள்ள நிலையில், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மட்டும் சிக்கியுள்ளது. கொலைகாரன் தனியார் விமானம் ஒன்றில், சம்பவயிடத்தில் இருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |