கடுமையான வரிகள் உறுதி... ஐரோப்பிய ஒன்றியத்தை அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான அபராதங்களை விதித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான வரிகளை விதிக்க இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
சட்டங்களை மீறியதாக
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஆப்பிள், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் நேரடியாகக் குறிவைப்பதாக குற்றம் சாட்டினார்.

கூகுளின் முதன்மையான (app store) சேவைகள் இணையவழிப் போட்டிச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு 890 மில்லியன் யூரோ (1 பில்லியன் டொலர்) அபராதம் விதித்தது.
கடந்த ஆண்டு ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உரிமையாளரான மெட்டா ஆகியவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க நிறுவனங்களையும், அதன் விளைவாக அமெரிக்க வரி செலுத்துவோரையும் கொள்ளையடிக்கும் நடைமுறை குறித்து அமெரிக்கா உடனடியாக விசாரணை தொடங்கும் என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இது போன்ற நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தனித்தனியாக விரிவான வரிகளை விதித்த மறுநாளே இப்படியான மிரட்டல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமையன்று கூகுள் நிறுவனத்தின் மீதான அபராதத்தை அறிவித்தபோது, ஷாப்பிங், ஹொட்டல்கள், போக்குவரத்து மற்றும் விளையாட்டு முடிவுகள் உள்ளிட்ட தனது சொந்தச் சேவைகளுக்கு அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் முன்னுரிமை அளித்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.

இந்த நிலையில், ட்ரம்பின் தலையீட்டை கூகிள் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக வர்த்தகக் கொள்கை சாராத முடிவுகளுக்காகப் பிற நாடுகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் ஒரு வழியாக, ட்ரம்ப் பெரும்பாலும் இறக்குமதி வரிகளையும், அல்லது வெறுமனே அவற்றை விதிப்பதாக மிரட்டுவதையும், ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்தி வந்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளைச் செயல்படுத்த மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒப்புக்கொள்ளும் வரை, அவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்போவதாக கடந்த ஆண்டு அவர் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |