ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால்…இராணுவ நடவடிக்கை உறுதி: டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுடன் சமரச ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் ராணுவ தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானில் வெடித்த குழப்பம்
நாட்டின் விலைவாசி உயர்வு மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இதில் 6000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 27,000க்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அமெரிக்கா ஈரான் அருகே தங்களது போர் கப்பல்களை நிலைநிறுத்தியது.
இது இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
அமெரிக்காவின் நடவடிக்கையை எச்சரித்த அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்கா போரை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய போராக இந்த முறை மாறும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அத்துடன் நாங்கள் போரை தூண்டுபவர்கள் இல்லை என்றும், எந்த நாட்டின் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்த விரும்பவில்லை என்றும் அயதுல்லா அலி கமெனி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
டிரம்ப் எச்சரிக்கை
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ஆனால் ஒப்பந்தம் இறுதியாக விட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், உலகின் சக்திவாய்ந்த கப்பல் தங்களிடம் இருப்பதாகவும், ஓரிரு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்து ஆகாவிட்டால் “இது பிராந்திய போராக மாறும்” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கூறியது சரியா இல்லையா என்பது தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |