மஸ்க் சொந்த நாட்டிற்கே செல்ல நேரிடும்! நாடுகளுக்கு வரி விதிப்பு அமுல்
நடவடிக்கை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம்
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) 57 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகளவு விதித்தார்.
குறிப்பாக இந்தியாவிற்கு 26 சதவீதமும், கனடாவிற்கு 25 சதவீதம் மற்றும் சீனாவிற்கு 125 சதவீதம் என வரியை அவர் அறிவித்தார்.
இந்த வரிவிதிப்பு சுமார் மூன்று மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கான கெடு வரும் 9ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9ஆம் திகதிக்கு பின் வரி விதிப்பு அமுலாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம்
அத்துடன் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், வருகிற 8ஆம் திகதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, இந்தியாவின் வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு வாஷிங்டனுக்கு சென்றுள்ளது. இதற்கிடையில், எலோன் மஸ்க்கிற்கு எச்சரிக்கை விடுத்து ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
சலுகைகள் மட்டும் இல்லையென்றால்
அதில், "ஜனாதிபதி தேர்தலில் எலோன் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார். ஆனால், EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன். இது எலோன் மஸ்கிற்கும் தெரியும்.
வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலோன் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென் ஆப்பிரிக்காவிற்கே அவர் திரும்பி செல்ல வேண்டியிருக்கும்.
இனி ரொக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது, நம் நாடு ஒரு அதிர்ஷ்டத்தை மிச்சப்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |