ஈரானுக்கு எதிராக ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்: இலக்கு எதுவென பிரகடனம்
Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான 'பிக்காக்ஸ் மலை' (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வந்த நிலையில், மிக விரைவில் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிக்காக்ஸ் மலை
ஈரானுடனான தீவிரமடைந்து வரும் போரை, தங்களுக்கு இது ஒரு அற்பமான விடயம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான புதிய தாக்குதல் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவித்த ட்ரம்ப், பிக்காக்ஸில் ஏதாவது நடந்துகொண்டிருந்தால், நாங்கள் மிக விரைவில் பிக்காக்ஸ் மலையைத் தாக்கக்கூடும் என்றார்.

மேலும், ஈரனுடனானது போர் அல்ல, வெறும் இராணுவ மோதல் மட்டுமே என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிக்காக்ஸ் மலை மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.
தற்போது மீண்டும் அந்த மலை மீதான தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
பிக்காக்ஸ் மலையின் ஆழத்தில் உள்ள சுரங்கங்களுக்குள், ஈரான் ஆயிரக்கணக்கான யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கிகளை நகர்த்தியுள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது.
இந்த நிலையம், நதன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகில், கோலாங் மலைக்குக் கீழே 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ளது. இது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு தளமாகும்; இங்கு ஆழமாக அமைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளன.

ஜூன் 2025-இல் நடைபெற்ற 12 நாள் போரின்போது, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிர்வாகம் இந்த இடமாற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுகிறது.
ஈரானின் மற்ற முக்கிய அணுசக்தி பதுங்குகுழிகள் மீது குண்டுவீசியபோது, டிரம்ப் இதற்கு முன்னர் இந்த இடத்தை சேதப்படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |