இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதாகக் கூறியுள்ளார்.
Truth Social-ல் வெளியிட்ட பதிவில், “இன்று இரவு ஈரானை மிகவும் கடுமையாக தாக்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், அமெரிக்கா விரைவில் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்றும், இது வெனிசுலாவில் நடந்த நடவடிக்கையைப் போல அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கி, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டது.
கார்க் தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் 90 சதவீத பங்கைக் கொண்ட முக்கிய துறைமுகமாகும்.
அமெரிக்க கடற்படை ஏற்கனவே ஈரானின் பெரும்பாலான ஏற்றுமதிகளை தடை செய்துள்ளது. ஆனால், இராணுவப்படை நடவடிக்கைகள் மூலம் முழுமையான கட்டுப்பாட்டை எடுக்கவில்லை.
Fox News-க்கு அளித்த பேட்டியில், “அமெரிக்க மக்களுக்கு இதைச் செய்யும் மனவலிமை இருக்கிறதா என்பது தெரியவில்லை” என ட்ரம்ப் கூறினார். அதேசமயம், “வெனிசுலாவில் செய்தது போல ஈரானிலும் வெற்றி பெறலாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வாரம், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, ட்ரம்ப் 250 மில்லியன் டொலர் மதிப்பிலான குண்டுகளை வீசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உலக எண்ணெய் சந்தைகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |