அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
உக்ரைனில் அமைதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடன்படவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பாவின் கோரிக்கை
விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ட்ரம்ப் குறிப்பிடவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் புடினுடனான சந்திப்பு பலனளிக்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அலாஸ்கா உச்சிமாநாடு உக்ரைனின் பிரதேசத்தை புடினுக்கு கையளிக்கப்படும் என்ற அச்சத்தை, ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் போக்கியதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் கோரிக்கைகளை ரஷ்யா கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது, மேலும் ஜூன் 2024 இல் புடினால் முதன்முதலில் முன்மொழியப்பட்ட அதன் நிலைப்பாடு மாறவில்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
இரண்டாவது சந்திப்பு
வெள்ளிக்கிழமை சந்திப்பில் விளாடிமிர் புடின் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், கடும் விளைவுகள் உறுதி என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கவும் ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
அலாஸ்காவில் முன்னெடுக்கப்படும் சந்திப்பானது, சில வேளை ஜெலென்ஸ்கியும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முதல் சந்திப்பு சாதகமாக அமைந்தால், இரண்டாவது சந்திப்பும் உடன் நடைபெறும் என்றார்.
தாமதப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மூவரும் இணைந்து இரண்டாவது சந்திப்பை முன்னெடுக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜேர்மனி தலைமையில் ஐரோப்பிய தலைவர்களும், ஜெலென்ஸ்கியும் ட்ரம்புடன் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்தனர். அந்த உரையாடல் பயனுள்ளதாக இருந்தது என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |