மீண்டும் போர் மூளும் அபாயம்... ஈரானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் முன்னெடுக்க முயலும் அமெரிக்கக் கடற்படையை ஈரான் தாக்கினால், அவர்கள் துடைத்தெறியப்படுவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரின் விளிம்பிற்கு
வளைகுடாப் பகுதியில் சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்களுக்கு உதவ, அமெரிக்கா திங்களன்று ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

அமெரிக்காவின் இந்த நகர்வு இப்பகுதியை மீண்டும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பிற்குக் கொண்டுசென்றுள்ளது. உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய நீர்வழியாகத் திகழும் அந்த நீரிணையின் மீதான தனது முற்றுகையை மீண்டும் நிலைநாட்ட ஈரான் முடிவெடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க இராணுவம் ஆறு சிறிய ஈரானியத் தாக்குதல் படகுகளை அழித்ததாகவும், ஈரானியக் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஆகிய இரண்டையும் இடைமறித்ததாகவும் கூறியிருந்த நிலையில், ஈரான் அதை மறுத்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக 800-க்கும் மேற்பட்ட கப்பல்களும், சுமார் 20,000 பணியாளர்களும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர்.
இராணுவக் கட்டளை எச்சரிக்கை
இந்த நிலையில், திங்களன்று ஃபாக்ஸ் நியூஸுடனான நேர்காணல் ஒன்றில், அமெரிக்காவின் தற்போதைய கடற்படை நடவடிக்கையை, இதுவரை மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகச்சிறந்த இராணுவ நகர்வுகளில் ஒன்று என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், அண்மையப் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய அதிகாரிகள் முன்னரை விட மிகவும் இணக்கத்துடன் நடந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நீரிணையை நெருங்கும் எந்தவொரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்துவதாக ஈரானின் மத்திய இராணுவக் கட்டளை திங்களன்று எச்சரித்தது;
மேலும், அப்பகுதியில் இருந்த ஓர் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதாகவும் அது உரிமை கோரியது. ஆனால், அமெரிக்கா தரப்பில் அதை மறூக்கவோ விளக்கமளிக்கவோ முன்வரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |