ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

Donald Trump Iran Oman
By Arbin Aug 18, 2026 03:25 AM GMT
Report

Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.

ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் | Trump Threatens To Bomb Oman

ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும்.

இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில்,

ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.

ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்

ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்

ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது.

போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார்.

ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார்.

இருப்பினும் ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.

ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் | Trump Threatens To Bomb Oman

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது.

ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US