மதுரோவை விட மோசமான முடிவாக... வெனிசுலாவின் புதிய ஜனாதிபதிக்கும் ட்ரம்ப் அச்சுறுத்தல்
வெனிசுலாவின் புதிய ஜனாதிபதிக்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவை விட மோசமான முடிவு ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
மிக மோசமாக இருக்கலாம்
கராகஸில் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த சில மணிநேரங்களிலேயே, வெனிசுலாவின் அடுத்த ஜனாதிபதியாக தீவிர சோசலிசவாதியான டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்புக்கு வரவேண்டும் என தாம் விரும்புவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ரோட்ரிக்ஸ் சரியானதைச் செய்யத் தவறினால், அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும், அது ஒருவேளை மதுரோவை விட மிக மோசமாக இருக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி மதுரோ, தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு ஃபெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எந்த நாட்டிற்கும் நடக்கலாம்
இதனிடையே, அடுத்து கிரீன்லாந்தைக் கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கும் ட்ரம்ப் பதிலளித்தார். கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது உறுதி என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்த டேனிஷ் பிரதேசம் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் சூழப்பட்டுள்ளது என்றார்.

ஆனால், ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு உரிய பதிலளித்துள்ள ரோட்ரிக்ஸ், நமது மாபெரும் தாய்நாட்டின் மக்களை ஒற்றுமையுடன் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் வெனிசுலாவுக்கு என்ன நடந்ததோ, அது எந்த நாட்டிற்கும் நடக்கலாம் என்றார்.

மக்களின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அந்த கொடூரமான பலப்பிரயோகம் எந்தவொரு நாட்டிற்கும் எதிராகச் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா வெனிசுலாவை நிர்வகிப்பதற்கு உதவுவதில் தனக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்பதையும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |