உலக வர்த்தகத்தை தீர்மானிக்கும் டிரம்பின் ட்ரூத் சோஷியல்: பதிவுகளை விரைவாக பெற ரூ.1 கோடி கட்டணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுகளை முன்னதாக பெற ரூ.1 கோடி வரை கட்டணம் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரம்பின் ட்ரூத் சோஷியல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது விதிமுறைகளை டிரம்ப் மீறியதாக குறிப்பிட்டு அவரது X தள கணக்கு பிளாக் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சொந்தமாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதள செயலியை உருவாக்கி அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் வெளியிடும் சில பதிவுகள் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.
உதாரணமாக, தற்போது பங்குகளை வாங்க சிறந்த தருணம் என்று டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை அடிப்படையாக கொண்டு அப்போது பங்குகள் வாங்கியவர்கள் சிறந்த பலனை அடைந்தனர்.
அதைப்போல ஈரான் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு கச்சா எண்ணெய் விற்பனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிடும் கருத்துகள் முக்கியமான ஒன்றாக வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் கருதுகின்றனர்.
டிரம்பின் பதிவு மில்லி வினாடி முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ கிடைத்தால் அது மிகப்பெரிய லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுத்த கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ரூ.1 கோடி கட்டணம்

இந்நிலையில், டிரம்பின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இருந்து அவரது பதிவுகளை விரைவாக ட்ரூத் ஏபிஐ தரவு சேவையை வழங்கி வருகிறது.
மேலும் ட்ரூத் ஏபிஐ மூலம் டிரம்பின் கருத்துகளை மில்லி விநாடிகளில் பெற முடியும். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ட்ரூத் ஏபிஐ-யை வாங்குவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சேவைக்கு ரூ.1 கோடி வரை வசூலிக்க டிரம்பின் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ட்ரூத் ஏபிஐ-யின் 3 ஆண்டு திட்டத்தில் இணைந்தால் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் முன்மொழியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |