தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப்
வெனிசுலாவைச் சேர்ந்த போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது போரில் ஒரு அதிரடி நடவடிக்கையாக, ஜனாதிபதி ட்ரம்ப் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
பனிப்போருக்கு பின்னர்
அமெரிக்காவின் USS Gerald R. Ford என்ற அந்த விமானம் தாங்கி கப்பலானது கரீபியன் நோக்கி புறப்பட்டுள்ளதாக பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1090 அடி நீளம் கொண்ட USS Gerald R. Ford கப்பலானது 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களைத் தாங்கும் திறன் கொண்டது. பனிப்போருக்கு பின்னர் கரீபியன் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பும் மிகப்பெரிய போர் கப்பலாகும் USS Gerald R. Ford.
சுமார் 100,000 டன் எடை கொண்ட இந்த கப்பல் உட்பட அணு ஆயுத நீர்மூழ்கி, F-35 போர் விமானம், MQ-9 ட்ரோன்கள், P-8 போஸிடான் உளவு விமானங்கள் மற்றும் B-52 குண்டு வீச்சு விமானங்களும் ட்ரம்ப் நிர்வாகத்தால் போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறக்கபப்ட்டுள்ளது.
அமெரிக்கா தற்போது கார்டெல் படைகளுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த அசாதாரண படையெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க தெற்கு கட்டளையின் கீழ் பென்டகன் ஒரு புதிய கூட்டுப் பணிக்குழுவையும் நிறுவியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும், வெளிநாட்டு மண்ணில் ஒரு ரகசிய மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ஜனநாயக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எச்சரிக்கையை மீறி இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொடிய தாக்குதல்
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா பத்து கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதன் விளைவாக கார்டெல் குழுக்களில் 43 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெனிசுலாவிடம் வெறும் 125,000 இராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளதாகவும், அவரது துருப்பிடித்த சோவியத் சகாப்த ஆயுதங்கள் அமெரிக்காவின் நவீன ஆயுதங்களை எதிர்க்க எந்த வாய்ப்பையும் கொண்டிருக்கவில்லை என இராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அமெரிக்கா தற்போது கரீபியனில் சுமார் 10,000 துருப்புக்களைக் கொண்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகு மிகப்பெரிய படையை அமெரிக்கா கரீபியனுக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |