ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் உக்ரைன்: ஜெலென்ஸ்கியை எச்சரித்த டிரம்ப்
Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்.
ஜெலென்ஸ்கியை வலியுறுத்திய டிரம்ப்
ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்களே முக்கியக் காரணம் என்று ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து ஓபன் போட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிர்ம்ப் குறிப்பிட்டார்.
பிராந்திய விவகாரங்கள். அமெரிக்காவுடன் இராஜதந்திர ஓப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இறுதியில் இந்த மோதல் அமெரிக்காவிடம் இருந்து விலகி செல்லும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் காற்று ஆற்றல் உள்கட்டமைப்பு தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பேசி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |