245 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்., அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்
சீன இறக்குமதிகளுக்கு ட்ரம்ப் 245 சதவீதம் வரி விதித்துள்ளார், இதனால் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீன இறக்குமதிகளுக்கு அதிகபட்சமாக 245 சதவீதம் வரியை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதலை கடுமையாக்கியுள்ளது.
இந்த முடிவை வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் ஆவணத்தில் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, சீனா விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் பதிலடி விதிகளின் எதிர்வினையாகும் என அமெரிக்கா கூறுகிறது.
குறிப்பாக, சீனா கனிமத் தனிமங்கள் மற்றும் அரிதான உலோகங்கள் ஆகியவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. இவை எல்லாம் ராணுவம், ஏவுகணை மற்றும் அரிய தொழில்நுட்ப உற்பத்திகளுக்கு முக்கியமானவை.
சீனா அண்மையில் ஆறு அரிதான கனிமங்களும், அரிய பூமி காந்தங்களும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டாம் என தடை விதித்துள்ளது. இதனால் உலகளாவிய சப்ளை செயின் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
மேலும் பதிலடி நடவடிக்கையாக, சீனா கடந்த வாரம் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதித்தது.
அதற்கு முன்பாக ட்ரம்ப் 145% வரி விதித்ததுடன், பிற நாடுகளுக்கான புதிய வரிகளை 90 நாட்கள் ஒத்திவைத்தார்.
அமெரிக்கா தற்போது 75 நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சீனாவுடன் மட்டும் இந்த வரி விதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரிகள் பல தொழில்துறைகளைப் பாதிக்கக்கூடியவையாக இருப்பதால், பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |