Kissing my a** சவுதி இளவரசரை குறிப்பிட்டு டிரம்ப் சர்ச்சை பேச்சு: வைரல் வீடியோ
சவுதி இளவரசர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.
டிரம்பின் சர்ச்சை பேச்சு
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இதனால் ஈரானிய ராணுவம் சவுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
President Trump mocks Saudi Arabia’s Crown Prince Bin Salman: “He didn’t think he would be kissing my ass, he really didn’t and now he has to be nice to me he better be nice to me, he’s gotta be..” pic.twitter.com/44rIkBVK8C
— Yemen in English (@YemenEnglish_ye) March 28, 2026
புளோரிடாவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய டிரம்ப், ஓராண்டுக்கு முன்பு அமெரிக்கா சரியும் நாடாக இருந்தது, ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் செல்வாக்குமிக்க நாடாக மாறிவிட்டதாக சவுதி இளவரசர் என்னிடம் தெரிவித்தார்.
நான் ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியாக இருப்பேன் என்று சவுதி இளவரசர் நினைத்தார், ஆனால் இப்பது அவர் என்னை திருப்திப்படுத்த (Kissing my a**) செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் பேசிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரம் மாநாட்டில், சவுதி இளவரசர் அற்புதமான மனிதர் மற்றும் போர் வீரன் என்று டிரம்ப் புகழ்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |