பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு வருகையாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
வால்ட் கார்டனில்
இன்று பிரித்தானியாவுக்கு வருகை தந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியாவை மன்னர் சார்லஸ், கமிலா, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் வரவேற்றனர்.
விண்ட்சர் எஸ்டேட்டில் உள்ள வால்ட் கார்டனில் ட்ரம்ப் வரவேற்கப்பட்டார். அப்போது அவர் 'நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்' என்று கேட்டை பார்த்து கூறினார்.
காலை 11.55 மணிக்கு திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வந்ததால் நேரம் சற்று தாமதமாக இருந்தது.
21 நிமிட காத்திருப்பிற்கு பிறகு, அவர் மதியம் 12.16 மணிக்கு தனது மனைவி மெலனியாவுடன் தன்னுடைய மரைன் ஒன் ஹெலிகொப்டரில் இருந்து வெளியே வந்தார். அவர்களின் வருகை இசையுடன் கொண்டாடப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ட்ரம்பின் வருகைக்கு முன்னதாக காரில் விண்ட்சர் எஸ்டேட்டுக்கு வந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |