பிரிஜிட் ஒரு அற்புதமான பெண்: மேக்ரானுடன் விருந்தில் பங்கேற்ற ட்ரம்ப் பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் பிரிஜிட் ஆகியோரை பாராட்டினார்.
ஆடம்பரமான இரவு விருந்தில் ட்ரம்ப்
ஜி7 மாநாட்டிற்காக பிரான்ஸ் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்தார்.
இமானுவல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஆடம்பரமான இரவு விருந்தில் கலந்துகொள்ள Versailles அரண்மனைக்கு சென்றார்.
பிரான்சின் முதல் தம்பதியினரை பாராட்டிய அவர், 'இது மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறோம், மேலும் பிரிஜிட் ஒரு அற்புதமான பெண்' என்றார்.
மேலும், "Versailles என்பது வெறும் தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரம் அல்ல; அது ஒரு உண்மையான, பிரம்மாண்டமான விடயம்" என்றும் தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |