ட்ரம்புக்கு வாக்களித்த பெண்: அவரது கணவரையே நாடுகடத்திய அமெரிக்கா
ட்ரம்புக்கு வாக்களித்த பெண் ஒருவரின் கணவரையே அமெரிக்க அதிகாரிகள் நாடுகடத்த, தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
ட்ரம்புக்கு வாக்களித்த பெண்
கியூபா அமெரிக்க குடியுரிமை கொண்டவரான Liyian Páez, ட்ரம்ப் ஆதரவாளர் ஆவார்.
அவர் ட்ரம்புக்கு வாக்களித்த நிலையில், அவரது கணவரான கியூபா நாட்டவரை அமெரிக்க அதிகாரிகள் நாடுகடத்திவிட்டார்கள்.
அமெரிக்கா குற்றவாளிகளைத்தான் நாடுகடத்தும் என தான் நம்பியிருந்த நிலையில், எந்த குற்றப் பின்னணியும் இல்லாத தன் கணவர் நாடுகடத்தப்பட்டதால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் Liyian.
Liyianஇன் கணவரான Alían Méndez Aguilar (28), ஏப்ரல் மாதம் கியூபாவுக்கு நாடுகடத்தப்பட, குழந்தைகளை தனியாக கவனித்துக்கொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அவரது குழந்தைகளில் ஒன்று சில குறைபாடுகள் கொண்ட, special needs என்னும் தனிக்கவனம் செலுத்தத் தேவையுள்ள ஒரு குழந்தை ஆகும்.
2019இல் அமெரிக்கா வந்த Alíanஐ 2020இல் நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அப்போதிருந்த கியூபா அரசு அவரை திருப்பி அழைத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
பின்னர் கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட Alían அமெரிக்காவில் ஒரு புது வாழ்வைத் துவக்கி, திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், திடீரென அவர் இப்போது நாடுகடத்தப்பட, அவரது மனைவியும் பிள்ளைகளும் அமெரிக்காவில் தனியாக தவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |