ஈரானை அணு ஆயுதம் ஏந்த விடமாட்டோம்: டிரம்ப் உறுதி: ஈரான் கூறிய காரணம்
ஈரானை அணு ஆயுதம் ஏந்த அமெரிக்கா எப்போது அனுமதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான கருத்து வேறுபாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஈரான் தங்களின் அணுசக்தி இலக்குகளில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்கள்
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாடு அணு ஆயுதங்களை வைத்து இருப்பது தொடர்பான தங்களது விருப்பங்களை வெளிப்படையாக தெரிவித்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஈரான் தங்கள் ஆசையை தெளிவாக வெளிப்படுத்தி விட்டது, ஆனால் ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்கள் தொடர்பான விருப்பத்தை கைவிடாததே இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு மாறாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தில், இரு தரப்பும் பேச்சுவார்த்தையின் மிக நெருக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் அமெரிக்க அதிகாரிகளின் அதிகப்படியான நிபந்தனைகள் காரணமாக இந்த முன்னேற்றம் தடைபட்டதாக குற்றம் சாட்டினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |