நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெண் செய்தியாளரை பார்த்து நீங்கள் ஏன் சிரிப்பது இல்லை என கேள்வி எழுப்பியது தற்போது வைரலாகி வருகிறது.
எப்ஸ்டீன் கோப்புகள்
ஜனவரி 31ம் திகதி அமெரிக்க நீதித்துறை கிட்டத்தட்ட 30 லட்சம் பக்கம் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இதில் 2000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எப்ஸ்டீன் விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பில்கேட்ஸ், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ., எலான் மஸ்க் போன்ற பலரின் பெயர் இடம் பெற்று இருப்பது ஒட்டுமொத்த உலக அரசியலையும் அசைத்துள்ளது.
Trump is right about Kaitlan Collins from CNN. The only time she smiles is when she goes on liberal podcasts like Jon Stewart.
— FAFO (@fafowatch) February 3, 2026
Collins is a professional propagandist and not a real journalist. She also has no basic manners, always being rude and interrupting the President. pic.twitter.com/TlMYieAWDS
டிரம்பின் கேள்வியால் பரபரப்பு
இந்நிலையில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் திருத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வழங்கிய நேரடி வாக்குமூலங்கள் மற்றும் நேர்காணல்கள் மறைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று பெண் நிருபர் ஒருவர் ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர், அதனால் தான் CNN செய்தி நிறுவனத்திற்கு நல்ல ரேட்டிங் கிடைப்பது இல்லை என்று தெரிவித்தார்.
CNN பெண் செய்தியாளர் கைட்லான் காலின்ஸிடம், “உங்களை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும், நான் நீங்கள் சிரித்து இதுவரை பார்த்ததே இல்லை. நீங்கள் ஏன் சிரிப்பது இல்லை என்று தெரியுமா? ஏனென்றால் உங்களிடம் உண்மையே இல்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன் எப்ஸ்டன் விவகாரம் குறித்து தொடர்ந்து கிளறுவது நாட்டிற்கு நல்லது அல்ல என்றும், அதிலிருந்து மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
CNN ஆதரவு
டிரம்பின் இந்த கருத்துக்கு பிறகு CNN செய்தி நிறுவனம் உடனடியாக பெண் செய்தியாளர் கைட்லான் காலின்ஸ்-க்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில், கைட்லான் காலின்ஸ் தனித்துவமான மற்றும் தைரியமான பத்திரிகையாளர், வெள்ளை மாளிக்கையில் இருந்தும், செய்தி களத்தில் இருந்து மிகவும் நேர்மையாக மற்றும் ஆழமாக செய்திகளை வழங்க கூடியவர் என்று தெரிவித்துள்ளது.
அவர் தன்னுடைய செய்தியாளர் திறனை CNN செய்தி தளம் வாயிலாக திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும், உலகில் உள்ள அனைவருக்கும் யாரை நம்பலாம் என்று தெரியும் எனவும் குறிப்பிட்டு டிரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |