அந்த முடிவு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்... ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
விளாடிமிர் புடின் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முயன்றால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பைத்தியமாகிவிட்டார்
ரஷ்ய தாக்குதலின் போது தாம் மெளனமாக இருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் ட்ரம்ப் தமது சமூக ஊடகப்பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமது Truth சமூக ஊடகப் பல்லத்தில் பதிவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்,
ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் தமக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என பதிவு செய்துள்ளார்.
தேவையில்லாமல் மக்களின் உயிர்களை அவர் பறிக்கிறார், இராணுவத்தினர் மட்டுமல்ல என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைகள் தமது மிகுந்த வியப்பை அளிப்பதாக குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெலென்ஸ்கி பேசத்தொடங்கினாலே அது சிக்கலில் முடிகிறது. அவர் பேசாமல் இருப்பது நல்லது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மூன்று வருடப் போரில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய பின்னர்,
அமெரிக்காவின் மௌனத்தை ஜெலென்ஸ்கி கண்டனம் செய்தார். சனிக்கிழமை இரவும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் ரஷ்ய தரப்பு உக்ரைனை மொத்தமாக உலுக்கியிருந்தது. அதில் 3 சிறார்கள் உட்பட 12 பேர்கள் கொல்லப்பட்டனர். 298 ட்ரோன்கள் மற்றும் 69 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ரஷ்யா மதிக்கவில்லை
இந்த நிலையில், ரஷ்யாவின் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும் அந்த நாட்டிற்கு எதிராக புதிய தடைகளை விதிக்க போதுமான காரணமாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரத்தின் போது, தாம் தெரிவு செய்யப்பட்டால், பதவியேற்பதற்கு முன்பே, உக்ரைனில் போரை 24 மணி நேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று மீண்டும் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது ட்ரம்பின் முடிவுகளை ரஷ்யா மதிக்கவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மட்டுமின்றி, ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி என்றால் மெளனம் காப்பதும் தொடர் கதையாக மாறியுள்ளது.
மட்டுமின்றி, புடின் அமைதியை விரும்புகிறார் என டர்ம்ப் மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதற்கு முரணாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |