சில பேர்கள் கொல்லப்படுவதை... ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தரான பாகிஸ்தானிடமிருந்து அமெரிக்கா பெற்ற சமீபத்திய முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஈரான் கூறியுள்ளது.
விரும்பத்தகாத
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததை அடுத்தே இது வெளியாகியுள்ளது.

ஒன்று நாம் ஒரு உடன்பாட்டிற்கு வருவோம் அல்லது சற்று விரும்பத்தகாத சில காரியங்களைச் செய்வோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறேன் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தாம் அவசரப்படவில்லை என்றும் அதிகமானோர் கொல்லப்படுவதை விட, அந்த எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆராய்ந்து வருவதாக
இந்த நிலையில் பாகிஸ்தானிடமிருந்து அமெரிக்கா பெற்ற சமீபத்திய முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானியச் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கத் தடையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |