அடுத்த தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும்- ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அணு ஆயுதங்கள் இல்லாத சமமான ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் ‘Operation Midnight Hammer’-ஐ விட மோசமான தாக்குதலை சந்திக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், Truth Social-ல் வெளியிட்ட பதிவில், “ஒரு பெரிய Armada படை ஈரானை நோக்கி செல்கிறது. அதில் Aircraft Carrier Abraham Lincoln உட்பட சக்திவாய்ந்த கப்பல்கள் உள்ளன. தேவைப்பட்டால் வேகமாகவும் வன்முறையுடனும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளன” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அச்சுறுத்தலின் சூழலில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இராணுவ அச்சுறுத்தலின் மூலம் தூதரகம் செயல்படாது” எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், ஈரான் IRGC தளபதி, “எங்கள் மீது தாக்குதல் நடத்த அண்டை நாடுகளின் நிலம், வான்பரப்பு அல்லது கடல் பயன்படுத்தப்பட்டால், அவை பகை நாடுகளாக கருதப்படும்” என எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலாக சவுதி அரேபியா, தங்கள் நிலம் அல்லது வான்வழியை ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்தது.
ட்ரம்ப், “நேரம் குறைந்து வருகிறது. ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. உலகளாவிய அரசியல் சூழலில் புதிய அலைகளை கிளப்பும் வகையில் இந்த எச்சரிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump warning to Iran 2026, Trump Iran next attack news, Tehran rejects US talks latest, Trump stern warning Middle East, US Iran nuclear talks dispute, Trump Operation Midnight Hammer, Iran rejects negotiations Trump, Trump Iran conflict escalation, Trump Truth Social Iran post, US Iran political tensions today