ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
Trump warns Iran over Peace talks: ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்
அமெரிக்கா -ஈரான் இடையே நடந்து வரும் போர் தாக்குதலில் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தொடர்பான இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களால் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை சிக்கலாகியுள்ளன. மத்திய கிழக்கில் இவ்வாறு போர் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வராவிட்டால், அந்நாடு மீண்டும் கடுமையான ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதே இந்த எச்சரிக்கையின் முக்கிய அம்சமாகக் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இல்லையெனில், ஈரான் மீண்டும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். ஏற்கெனவே நடத்தப்பட்ட எபிக் பியூரி தாக்குதல்களைப்போல மீண்டும் ஒரு லிட்டில் எபிக் ஃபியூரி தாக்குல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
டிரம்பின் இந்த எச்சரிக்கை ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் உத்தியா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.