அமெரிக்காவின் தடுப்பு வலயத்தை அணுகினால்., ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானிய கப்பல்கள் அமெரிக்காவின் தடுப்பு வலயத்தை அணுகினால் உடனடியாக அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து கடற்படை முற்றுகையை துவங்கியுள்ளது.
ஈரான், இந்த நடவடிக்கையை, சர்வதேச பொருளாதாரத்துக்கு எதிரான பழிவாங்கும் போர் எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, “இது உலக பொருளாதாரத்தை பாதிக்கும்” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த முற்றுகை அறிவிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கிடையிலான இடைக்கால சமாதான ஒப்பந்தம் சீர்குலையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிரித்தானியா, அமெரிக்காவின் இந்த தடுப்பை ஆதரிக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான், சமாதான முயற்சிகளை தொடருவதாக தெரிவித்துள்ளது.
ஈரான், “இது கடல் கொள்ளைச் செயல்” எனக் கூறி, தன்னுடைய கடற்பரப்பை பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஏற்கனவே உயர்ந்து 4.12 டொலருக்கு மேல் சென்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த பதற்றத்தால், உலகளாவிய எரிசக்தி விலைகளையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |