அப்படி ஒன்று நடந்தால்... ஈரானை வரைபடத்தில் இருந்தே துடைத்து எறிவோம்: ட்ரம்ப் மிரட்டல்
அமெரிக்கத் தலைவர் ஒருவரைக் கொலை செய்வதில் ஈரான் எப்போதாவது வெற்றி பெற்றால், அந்த நாடு இந்த பூமியில் இருந்தே துடைத்தெறியப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வரைபடத்தில் இருந்தே
பரஸ்பர அச்சுறுத்தல்கள் நிறைந்த ஒரு பதட்டமான சூழலில், இரு நாடுகளின் தலைவர்களில் எவரேனும் படுகொலை செய்யப்பட்டால், எதிர்பார்க்காத அளவிலான போர்களைத் தொடங்குவோம் என்று ஈரானும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தின.

இந்த நிலையில், ட்ரம்புக்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், அப்படி ஒன்று நடந்தால், அமெரிக்க இராணுவம் ஈரானை வரைபடத்தில் இருந்தே துடைத்தெறிவார்கள் என தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஈரானின் உயர் தலைவர் அலி காமெனிக்கு எதிரான உயிர் அபாயம் தொடர்பில் பதிலளித்துள்ள ஈரானிய ஜெனரல் அபோல்பஸ்ல் ஷெகார்ச்சி, அப்படி ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் அந்தக் கைகளை வெட்டாமல் அடாங்காது, இது வெறும் வாய்ச்சவடால் அல்ல என்பதும் ட்ரம்பிற்கு தெரியும் என்றார்.
ஆனால், ஓராண்டிற்கு முன்னர், ட்ரம்ப் பதவிக்கு வந்த புதிதில் இதேப்போன்ற ஒரு மிரட்டலை ட்ரம்பும் விடுத்திருந்தார். ஈரான் அப்படியான ஒரு செயலுக்கு முயன்றால், அவர்கள் மொத்தமாக அழித்தொழிக்கப்படுவார்கள் என்றார்.
1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையிலிருந்து ஈரான் இன்னும் மீள முடியாமல் தவிக்கிறது.
20,000 தாண்டக்கூடும்
இரண்டு வாரங்கள் நீண்ட போராட்டங்களின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் பணியில் மனித உரிமை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, 4,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை, ஊடகங்களின் மிக உயர்ந்த மதிப்பீடுகளான 20,000-ஐயும் தாண்டக்கூடும் என்று குறிப்பிடப்பட்டது.

86 வயதான அயதுல்லா காமெனியின் தலைமையின் கீழ் நாட்டின் பண மதிப்பு புதிய சரிவைச் சந்தித்த டிசம்பர் மாதத்தில், பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து நிவாரணம் கோரி ஈரானியர்கள் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர்.
இதுவே பின்னர் திடீரென்று வன்முறை மற்றும் போராட்டங்களாக வெடித்தது. ஆனால், நாட்டின் தற்போதைய மிக ம்மோசமான நிலைக்கு வெளிப்படையான காரணம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்ட கண்மூடித்தனமாக பொருளாதாரத் தடைகளே என ஈரான் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |