ரஷ்யா மீதும் வரிகள்... புடினுக்கே எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்: அதிர்ச்சியில் உலகம்
உலக நாடுகள் பலவற்றை வரி விதிப்பு மூலம் மிரட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கே எச்சரிக்கை விடுத்துள்ளதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
முன்பின் யோசிக்காமல் செயல்படும் ட்ரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர் முன்பின் யோசிக்காமலே முடிவெடுப்பது போல் தெரிகிறது.
பதவிக்கு வந்ததிலிருந்தே, பின்விளைவுகள் குறித்து யோசிக்காமலேயே முடிவுகள் எடுப்பதும், பின்னர் பின்வாங்குவதுமாகவே இருக்கிறார் ட்ரம்ப்.
சில நாடுகள் மீது வரி விதிப்பதும், பின் வரிவிதிப்பை ஒத்திவைப்பதும், யோசிக்காமல் அறிக்கைகள் விடுவதுமாக இருக்கிறார் ட்ரம்ப்.
அவ்வகையில், ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கே ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
புடினுக்கே எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
"Based on the fact that Russia is absolutely 'pounding' Ukraine on the battlefield right now, I am strongly considering large scale Banking Sanctions, Sanctions, and Tariffs on Russia until a Cease Fire and FINAL SETTLEMENT AGREEMENT ON PEACE IS REACHED. To Russia and Ukraine,… pic.twitter.com/kwrfbaQw4d
— President Donald J. Trump (@POTUS) March 7, 2025
ஆம், ரஷ்யா போர் நிறுத்தம் அறிவித்து, அமைதி ஒப்பந்தத்தை எட்டும்வரை ரஷ்யா மீது பெரிய அளவில் தடைகள் மற்றும் வரிகள் விதிப்பது குறித்து தான் தீவிரமாக யோசித்துவருவதாகத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
அத்துடன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என உத்தரவும் இட்டுள்ளார் ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், இதை புடின் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதுதான் உலக நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
உக்ரைனில் அமைதியை உருவாக்குகிறேன் என்று கூறிவிட்டு, புடினை மிரட்டி, ட்ரம்பே மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதுதான் அந்த அச்சம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |