ஜெலென்ஸ்கியை வரவேற்ற டிரம்ப்: உக்ரைன் போரை விரைவில் முடிக்க திட்டம்
புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ(mar -a-lago) இல்லத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்துள்ளார்.
டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ(mar -a-lago) இல்லத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியை இல்லத்தின் வாசலுக்கு வந்த வரவேற்ற டிரம்ப், அதிகாரப்பூர்வ தனிப்பட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது உக்ரைன் - ரஷ்யா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
அத்துடன் போர் நிறுத்தத்தை விரைவு படுத்துவதன் மூலம், மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் டிரம்ப் விவரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த சந்திப்பிற்காக தன்னை அழைத்த டிரம்பிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அமைதியை நோக்கிய இந்த பயணத்தில் அமெரிக்காவின் இந்த பேச்சுவார்த்தை ஒரு பாலமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைதி திட்டத்தின் ரகசியம்
டிரம்ப் தலைமையிலான பேச்சுவார்த்தை குழு முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அம்சங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நேரடி சந்திப்பு பேச்சுவார்த்தை முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |