கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட தவறிய டிரம்ப்: சீனாவை குற்றம்சாட்டி ட்வீட்!
கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறியதை அடுத்து, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வேலையின்மை சலுகைகளை தற்காலிகமாக இழந்துள்ளனர்.
ட்ரம்ப் தொடர்ந்து கையெழுத்திடுவதைத் தாமதப்படுத்தினால் "பேரழிவு தரும் விளைவுகள்" இருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரித்திருந்தார், ஆனால் சனிக்கிழமை காலக்கெடு இப்போது கடந்துவிட்டது.
இதனால் வேலையின்மை சலுகைகள் மற்றும் எவிக்ஷன்களுக்கு விதிக்கப்பட்டத் தடை ஆகியவை பாதிக்கப்படும்.
பல மாதங்கள் கடினமான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்குப் பிறகு காங்கிரஸால் 900 பில்லியன் டாலர்கள் (65 665 பில்லியன்) மதிப்புள்ள நிவாரண தொகுப்பை அங்கீகரித்தது.
இந்த மசோதாவில் ஆண்டுக்கு 75,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் அமெரிக்கர்களுக்கு 600 டாலர் வழங்கப்படும் திட்டம் அடங்கும். ஆனால், அமெரிக்கர்கள் 2,000 டாலர்களைப் பெற வேண்டும் என்று தான் விரும்புவதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால் காங்கிரசில் குடியரசுக் கட்சியினர் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
அமெரிக்க உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை ஒரு ட்வீட்டில், டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஆதரித்துக்கொண்டார். மேலும், இதற்கெல்லாம் காரணம் கொரோனா வைரஸ் வெடித்தது தான் என சீனாவை குற்றம் சாட்டியுள்ளார். இந்த டிவீட் தற்போது வைரலாகிவருகிறது.
$2000 + $2000 plus other family members. Not $600. Remember, it was China’s fault!
— Donald J. Trump (@realDonaldTrump) December 27, 2020
கொரோனா வைரஸ் பொருளாதார நிவாரணம் 1.4 ட்ரில்லியன் டாலர்கள் கூட்டாட்சி பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பகுதி அரசாங்க பணிநிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கும், அதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாப் கேப் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், டிரம்ப் இன்னும் கையெழுத்திட வேண்டியுள்ள, கொரோனா வைரஸ் உதவி இந்த மசோதாவில் இருக்காது.
இதனால், சுமார் 14 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகைகள் இன்றி பாதிக்கப்படுவார்கள்.