டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதல்! உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு
டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என தெரிவித்தார்.
இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார்.
‼️ Full video of the heated verbal clash between Trump, Zelenskyy, and Vance. pic.twitter.com/YoIuODslBk
— NEXTA (@nexta_tv) February 28, 2025
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறுக்கிட்டு உக்ரைனிய ஜனாதிபதியை பார்த்து “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
“நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று, நீங்கள் நன்றியுள்ள இருக்க வேண்டும், ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும் என டிரம்ப் தெரிவித்தார்.
இறுதியில் டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பானது வார்த்தை மோதலுடன் நிறைவடைந்தது.
ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினை
டிரம்ப்-ஜெலென்ஸ்கி-வான்ஸ் இடையிலான வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
போலந்து பிரதமரும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருமான டொனால்ட் ட்ஸ்க் X தளப் பதிவில், “உக்ரைன் தோழர்களே, நீங்கள் தனியாக இல்லை” என பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட போது, டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் நிகழ்வு குறித்து பதிலளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர், உக்ரைன் மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
There is an aggressor: Russia.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 28, 2025
There is a victim: Ukraine.
We were right to help Ukraine and sanction Russia three years ago—and to keep doing so.
By “we,” I mean the Americans, the Europeans, the Canadians, the Japanese, and many others.
Thank you to…
3 வருடங்களாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததிலும், உக்ரைனுக்கு உதவியதிலும் நாங்கள் அனைவரும் சரியாக இருந்தோம், இதனை தொடர்ந்து செய்வதும் சரி தான் என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடக்கத்தில் இருந்து போராடுபவர்களை மதிப்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |