சுவிட்சர்லாந்தில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: அமைதி நெருங்கி விட்டதாக கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே நேரடி சந்திப்பு தொடங்கியுள்ளது.
டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
சுவிட்சர்லாந்தின் டாபஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் நேரடி சந்திப்பை நடத்தி வருகின்றனர்.
டிரம்ப் - ஜெலென்ஸ்கி இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை வியாழக்கிழமை தொடங்கியதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று சுவிட்சர்லாந்து வந்தடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த வார தொடக்கத்திலேயே சுவிட்சர்லாந்தின் டாபஸ் நகருக்கு வந்த நிலையில், நேற்று நடத்திய தன்னுடைய உரையில் அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவு கொள்ளை குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் தன்னுடைய நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் வெகு அருகில் சென்றுவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |