டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: 90% தயார் நிலையில் போர் நிறுத்தப் பரிந்துரைகள்
போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கிட்டத்தட்ட 20 அம்சங்களை கொண்ட சமாதான ஒப்பந்தத்தையும் அமெரிக்கா பரிந்துரை செய்து இருந்தது.

மேலும் இதனை இரு தரப்புகளும் ஏற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜெலென்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தெரிவித்த தகவலில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் டிரம்பின் பரிந்துரைகளில் 90 சதவீதம் தயாராகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |