ஹிஸ்புல்லாஹ் கும்பலை ஒழித்தே ஆகவேண்டும்! லெபனான் மீது கவனத்தை திருப்பும் டிரம்ப்
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாஹ் படையினரை அகற்றுவது குறித்து நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் படையினரை அகற்றுவது உறுதி
லெபனான் நாட்டிற்கான ஆதரவை உறுதிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், லெபனான் நாட்டில் உள்ள ஆயுதமேந்திய கும்பலான ஹிஸ்புல்லாஹ்வை(Hezbollah) அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், லெபனான் பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மைக்கு ஹிஸ்புல்லாஹ் படையினரே காரணம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் “நாம் ஹிஸ்புல்லாஹ் கும்பலை ஒழித்தே ஆகவேண்டும், இந்த ஆயுதமேந்திய கும்பலால் பல ஆண்டுகளாக பேரழிவு” ஏற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மத்திய கிழக்கில் நிலைத்தன்மையை நிலைநாட்ட நட்பு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் அதிகரிக்கும் மோதல்
இஸ்ரேல் மற்றும் தெற்கு லெபனான் இடையிலான வான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இஸ்ரேலுடனான இந்த மோதலில் லெபனானில் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்திய தகவலின் படி கிட்டத்தட்ட 570-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் விவகாரம் தவிர, நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் நாடு மீதும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பெயின் நாட்டு மக்கள் அற்புதமானவர்கள் ஆனால் அந்நாட்டு அரசு தலைமை சரியல்ல என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |