ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் இழப்பு
Trumps Iran war costs 33.4 Bn dollars in 4 Months: ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்கா 33.4 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.
33.4 பில்லியன் டொலர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்த ஈரான் போரின் நான்கு மாத கால நடவடிக்கைகளில், அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1,10,11,980 கோடி) செலவாகியுள்ளதாக பெண்டகன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை Operation Epic Fury என அழைக்கப்பட்டது. பெண்டகன் கணக்கீட்டின்படி, ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் வாங்குவதற்கே 22.3 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
குறைபாடுகள் மற்றும் தடைகள்
மேலும், போரின் போது இழந்த இராணுவ உபகரணங்களின் மதிப்பு 3.7 பில்லியன் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செலவுகள், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கையிருப்பு குறைவுகளை (strategic inventory shortfalls) வெளிப்படுத்தியுள்ளன. அதேசமயம், பாதுகாப்பு தொழிற்துறை உற்பத்தி தடைகளை வெளிப்படுத்தியதாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை, 2026 பிப்ரவரி 28 முதல் ஜூன் 29 வரை நடந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த இராணுவ நடவடிக்கையாக நடந்த இந்த போர், ஹார்முஸ் நீரிணையில் நடந்த தாக்குதல்களையும், ட்ரோன்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் பயன்பாட்டையும் உள்ளடக்கியது.
மொத்த செலவுகளில் 7.4 பில்லியன் டொலர் பிற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் போரின் போது சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை (infrastructure) பழுது பார்க்கும் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இந்தப் பெரும் இழப்புகளும் செலவுகளும், அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், உலக சந்தைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |