ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியிலிருந்து நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
வருகிற 20-ஆம் திகதி 46-வது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கிறார்.
கேபிட்டல் கட்டடத்தில் ஏற்பட கலவரத்தை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் முடிவுகளை நான் முற்றிலும் ஏற்கவில்லை என்றாலும், ஜனவரி 20 அன்று முறையான பதவி பறிமாற்றம் நடக்கும்.
சட்டப்பூர்வமான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன என்பதை உறுதி செய்வதற்கான எங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன்.
இது ஜனாதிபதி வரலாற்றில் மிகப் பெரிய முதல் பதவி காலத்தின் முடிவைக் குறிக்கும் அதே வேளையில், அமெரிக்காவை மீண்டும் உலகின் மிகச் சிறந்த நாடாக்குவதற்கான எங்கள் போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே இது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.