ட்ரம்பின் அச்சுறுத்தல்... 38 வருட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ரஷ்யா: விரிவான பின்னணி
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப் பெரிய மற்றும் மிக மோசமான போர் ஒன்றை ரஷ்யா முன்னெடுத்து வருவது அமெரிக்கா உடனான அதன் உறவையும் மிக மோசமாக பாதித்துள்ளது.
ட்ரம்ப் முயற்சித்தபோதும்
உக்ரைன் - ரஷ்யா மோதலில் இதுவரை பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பில் இருந்தும் பொதுமக்கல் மற்றும் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், தாம் வெற்றி பெற்றால், அடுத்த 10 நாட்களுக்குள் போர் முடிவுக்கு வரும் என்றும் பரப்புரை செய்தார்.
ஆனால், ட்ரம்பால் இதுவரை போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுடன், ரஷ்யாவின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பனிப்போருக்குப் பின்னர் எதிரியான வலிமைமிக்க ரஷ்யாவை அச்சுறுத்துவது உட்பட, சாத்தியமான ஒவ்வொரு வாய்ப்பையும் ட்ரம்ப் முயற்சித்தபோதும் போர் முடிவுக்கு வரவில்லை.
ஜனாதிபதி ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ரஷ்யா இன்னொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான தடையை அது நீக்கியுள்ளது.
ஆகஸ்ட் 4ம் திகதி திங்களன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான தடை இனி இல்லை என்றும், தடையைப் பராமரிக்கத் தேவையான நிபந்தனைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா அருகே அணு சக்தி நீர்மூழ்கிகளை அனுப்ப ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா வெளியேறியிருந்தது
ட்ரம்பின் ஒற்றை முடிவால், 38 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. கடந்த 1987 ஆம் ஆண்டில், ரஷ்யா (சோவியத் ஒன்றியம்) மற்றும் அமெரிக்கா இடையே ஒரு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது,
இது இரு நாடுகளும் 500 முதல் 5,500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்தாது, தரையிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்தாது என்பதே.
ஆனால் 2019ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருந்தது. பல முறை இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவால் அப்படியான ஒரு முடிவெடுக்கப்பட்டால் மட்டுமே ரஷ்யா அப்படியான ஏவுகணைகளை ஏவ தயார் நிலைக்கு வரும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவே அணு ஆயுத நீர்மூழ்கிகளை ரஷ்யா அருகே அனுப்பியுள்ளது, இதனால் ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்க ரஷ்யா முடிவு செய்தது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |