மனைவிக்கு வளைகாப்பு... கணவன் போட்டு உடைத்த உண்மை: அதிர்ந்த உறவினர்கள்
மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது கணவன் போட்டு உடைத்த உண்மையால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததைக் குறித்த ஒரு செய்தி மீண்டும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Image: UGC
மனைவிக்கு வளைகாப்பு... கணவன் போட்டு உடைத்த உண்மை
ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்ததாக கருதப்படும் ஒரு பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சியில், நண்பர்களும் உறவினர்களும் கூடியிருக்க, மைக்கைப் பிடித்து பேசத்தொடங்கியுள்ளார் அந்தப் பெண்ணின் கணவர்.
இந்த பார்ட்டி எனக்கானது அல்ல, ஏனென்றால், என் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையதல்ல என்று அந்தக் கணவர் கூற, நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன் நிறுத்தாத அந்தக் கணவர், இந்தக் குழந்தையின் தந்தை இவர்தான், இது இவர்கள் இருவருக்குமான பார்ட்டி, என்னுடையதல்ல என்று கூறி வேறொரு நபரைக் காட்ட, அந்தப் பெண்ணும் அந்த நபரும் அதிர்ச்சியில் உறைய. என் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அது உண்மையில்லை, அவள் ஆறு மாத கர்ப்பிணி என்று கூறும் அவர், மருத்துவ ஆவணங்கள் மூலம் ஆதாரத்துடன் அதை விளக்க, அவரது சட்டத்தரணியோ,
அந்தப் பெண்ணும் அவரது ரகசிய காதலரும் சேர்ந்து இருக்கும் காட்சி அடங்கிய வீடியோவை ஆதாரமாகக் காட்ட,
உண்மை வெளியே வந்ததால், அந்தப் பெண்ணும் அவரது ரகசிய காதலரும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள்..
Credits: YouTube
கெஞ்சும் மனைவி... வெளியான வீடியோ...
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அந்த ரகசிய காதலரை தாக்கத் துவங்க, தயவு செய்து இங்கு எதுவும் பேசாதீர்கள், நாம் தனியாகப் பேசிக்கொள்ளலாம் என அந்தப் பெண் தன் கணவனிடம் கெஞ்ச,
அந்தப் பெண்ணின் தந்தையோ அதிர்ந்துபோய் என்னம்மா இதெல்லாம் என மகளிடம் கேட்க, அவர் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் அப்பா என்று கூறியபடியே அந்தப் பெண் தன் கணவர் பின்னால் ஓடும் காட்சியுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
Credits: YouTube
உண்மையில், இந்த வீடியோ 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வெளியானது. ஆனால் ஏனோ தெரியவில்லை, மீண்டும் அந்த செய்தியை தற்போது பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Credits: YouTube
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |