லட்சக்கணக்கில் பணம் வந்தது உறுதி! ஆர்யா குறித்து இலங்கை தமிழ்ப்பெண் அளித்த புகாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய தகவல்
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றினார் என ஈழப்பெண் அளித்த புகாரின் முதல் கட்ட விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் விட்ஜாவுக்கு ஓன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 லட்சத்து 40,000 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் விட்ஜா.
இதைதொடர்ந்து, நடிகர் ஆர்யா மீது ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்
அதில், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தன்னிடத்தில் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதோடு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், நடிகர் ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ஆர்யா எப்படி நாடகம் போட்டாலும் தனது புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் விட்ஜாவிடம் இருந்து கட்டுகட்டாக ரூ 70 லட்சம் ரூபாய் பணத்தை வெஸ்டர்ன் யூனியன் மனி டிரான்ஸ்பர் மூலம் ஆர்யா தனது மேலாளர் முகமது ஹூசைனி என்பவரது வங்கி கணக்கில் பெற்றது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக ஆர்யா கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.