வருங்காலத்தில் பாகிஸ்தான் நாட்டை சுனாமி தாக்கலாம்! எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்
வருங்காலத்தில் பாகிஸ்தான் நாட்டை சுனாமி தாக்க கூடிய பேராபத்து உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம், ஐ.நா. வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து நடத்திய நிகழ்விலே இவ்வதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாகிஸ்தானில் சுனாமி பேரிடர் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது எனவும் குவாடர் துறைமுகம் மற்றும் அந்த நகரம் சுனாமியால் நீரில் மூழ்க கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கராச்சி நகரில் ஒன்று முதல் 2 கி.மீ. வரையிலான கடலோர பகுதிகள் பாதிப்படைய கூடும். சிந்து கடலோர பகுதியும் சுனாமி அச்சுறுத்தலுக்கான இலக்காக உள்ளது என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி கராச்சி நகரில் ஒன்று முதல் 2 கி.மீ. வரையிலான கடலோர பகுதிகள் பாதிப்படைய கூடும். சிந்து கடலோர பகுதியும் சுனாமி அச்சுறுத்தலுக்கான இலக்காக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.