சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. தைவான் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை
தைவானின் தென்கிழக்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தைவானில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியானது
தென்கிழக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவானின் தென்கிழக்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 300 கிலோ மீற்றர் (190 மைல்) தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஒரு வசதியான கடையைக் கொண்ட தாழ்வான கட்டிடம் இடிந்து விழுந்ததாக தைவான் ஊடகங்கள் தெரிவித்தன.