பசுபிக் கடற்பரப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!
பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ தொலைவில் ரிக்டர் 7.4 அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
வனுவாட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் இன்று (17) ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது.
CCTV footage of 7.4 Earthquake in Port Vila, Vanuatu
— Disasters Daily (@DisastersAndI) December 17, 2024
December 17, 2024 #earthquake #Vanuatu #terremoto #sismo pic.twitter.com/0MJWyhepga
இதன் காரணமாக அதை சுற்றியுள்ள ஏனைய தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Lots of damage in Port Vila, Vanuatu.
— Disasters Daily (@DisastersAndI) December 17, 2024
A small tsunami of 1 meter wave reached Port Vila, it was adviced to move to higher ground.
Many reports of landslides in Vanuatu. pic.twitter.com/cS8iTYAJaq
சுமார் 330,000 மக்கள் வசிக்கும் 80 தீவுகளைக் கொண்ட ஒரு இடமாக குறித்த தீவு காணப்படுகிறது. இந்நிலையில் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கையால் அனைத்து மக்களும் பீதியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |