21 ஆண்டுகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஒருவர் பலி
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், வனுவாட்டுவில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எல் நினோ நிகழ்வால் இந்தியாவில் அதிக குளிர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மழைக்காலம் முடிவடைந்தாலும் அடுத்த 3 மாதங்கள் வரை கடுமையான குளிர் இருக்கும் என்றும் கூறப்படும் நிலையில், உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தற்போது பசிபிக் பெருங்கடலில் உள்ள Vanuatu என்ற தீவின் விலா துறைமுகத்தில் இருந்து, 31 கிலோ மீற்றர் தள்ளி கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.3 என ரிக்டர் அளவில் இது பதிவானது.
இதனால் அங்கு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை
இதன் தாக்கம் நியூசிலாந்து வரை உணரப்பட்டதால், தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அபாயம் உள்ள இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விலா துறைமுகத்தில் இருந்து 72 கிலோமீற்றர் தொலைவில், 4.7 ரிக்டர் அளவிலும் 2 நிலநடுக்கங்கள் பதிவானதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சில்லறை விற்பனையாளர்கள் நிறைந்த தெருவில் கட்டிடம் இடிந்து நொறுங்கியதில் வாகனங்கள் நசுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.
கட்டிட இடிபாடுகளில் ஒருவர் சிக்கியுள்ளதாக ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் Dan McGarry கூறுகையில், "வனுவாட்டு மற்றும் பசிபிக் தீவுகளில் எனது 21 வருடங்களில் நான் அனுபவித்த மிகக் கடுமையான நிலநடுக்கம் இதுவாகும். நான் பார்த்த நிறைய பெரிய பூகம்பங்களில், இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை. போர்ட் விலாவை சர்வதேச கப்பல் முனையத்துடன் இணைக்கும் சாலை மண்சரிவினால் தடைப்பட்டுள்ளது" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |