இஸ்ரேலியர்களுடனான தொடர்பை தடை செய்யும் மசோதா! விவாதத்தை தொடங்கிய நாடு
இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும் மசோதா குறித்த விவாதத்தில் துனிசியா இறங்கியுள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
காஸா மீதான குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழப்புகள் 9,000த்தை தாண்டியுள்ளது, துனிசியாவுடனான உறவை துண்டிக்கப்படும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது.
அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது.
இதன்மூலம் ஜியோனிஸ்ட் அமைப்பை அங்கீகரிப்பதையோ அல்லது அதனுடன் நேரடி அல்லது மறைமுக உறவுகளை ஏற்படுத்துவதையோ தடை செய்யப்படும்.
Yassine Gaidi – Anadolu Agency
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வியாழன் அன்று தொடங்கிய விவாதங்களின்படி, இந்த வரைவானது ஜியோனிஸ்ட் உடன் நேரடி அல்லது மறைமுக உறவுகளை நிறுவுவதல் என்பது உயர் தேசத்துரோகம் என வகைப்படுத்தப்படும் குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'The Crime of normalisation' குற்றம் நிரூபிக்கப்பட்ட எவருக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 முதல் 100,000 தினார் அபராதம் விதிக்கப்படலாம் என்று இந்த வரைவு கூறுகிறது.
மீண்டும் இந்த குற்றத்தை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக, இந்த மசோதாவானது துனிசியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான எந்தவொரு தொடர்புகளையும் தடைசெய்யும். இதில் நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.
FETHI BELAID/AFP or licensors
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |