2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! துனிசியர் நேரலையில் வெளியிட்ட வீடியோ
வட ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் 2 ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா தலைநகர் துனிஸில் இந்த விபத்து நடந்துள்ளது.
jebel Jelloud பகுதியில் தெற்கு புறநகர்ப் பகுதியிலிருந்து வந்த ரயிலுக்கும், மற்றொரு பிரதான பாகுதியிலிருந்து வந்து ரயிலுக்கும் இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 95 பேர் காயமடைந்துள்ளதாக அவசர உதவி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
إصابة 95 شخصا على الأقل في اصطدام قطارين في العاصمة التونسية#إرم_نيوز #تونس #سوسة #Tunisie pic.twitter.com/DJiGiFuNoC
— إرم نيوز (@EremNews) March 21, 2022
பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பலருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துனிசியாவைச் சேர்ந்த Souhail Abbes என்ற நபர், விபத்திற்கு பிறகு சம்பவயிடத்திலிருந்து பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.