30 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபிறகும் நாடுகடத்தப்படும் வெளிநாட்டவர்
சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகள் வாழ்ந்த நிலையிலும், வெளிநாட்டவர் ஒருவர் நாடுகடத்தப்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
துனிசியா நாட்டவர் ஒருவர் 30 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.
அந்த 56 வயது நபர் தனது இரண்டு பிள்ளைகளுடன் Vaud மாகாணத்தில் வாழ்ந்துவருகிறார், ஆனால், அவர் தன் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
விடயம் என்னெவென்றால், அவர் 2003ஆம் ஆண்டு முதல், வேலை எதுவும் செய்யவில்லை. அரசின் உதவி பெற்றே வாழ்ந்துவந்துள்ளார்.
அத்துடன், 240,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கடனும் வைத்துள்ளார். மேலும், மோசடி, தாக்குதல், திருட்டு முதலான பல குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், தனது உடல் நிலை, குடும்பம், இத்தனை ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தது ஆகிய காரணங்களை சுட்டிக் காட்டி தன்னை சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதிக்குமாறு கோரியுள்ளார் அவர்.
ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அவர் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போயே ஆகவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |