1 மில்லியன் டொலருக்கு மேல் விலைபோன டுபல் கிரீட மோதிரம்: ஏலத்தில் வென்ற Rapper டிரேக்
இசை ராப்பர் டிரேக் மறைந்த டுபல் ஷகுரின் கிரீட மோதிரத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் கொடுத்து ஏலத்தில் வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரீட மோதிரம்
மறைந்த அமெரிக்க ராப் பாடகர் டுபல் ஷகுரின் கிரீட மோதிரத்தை ராப்பர் டிரேக்(Rapper Drake) ஏலத்தில் விலைக்கு வாங்கி இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் சுமார் $1 மில்லியன் டொலருக்கு மேல் விலை கொடுத்து இந்த மோதிரத்தை வாங்கி இருப்பதாக ராப்பர் டிரேக் பகிர்ந்துள்ளார்.
Getty/robbreport.com
சோதேபியின் விற்பனைக்கு முந்தைய மதிப்பீட்டான சுமார் $200,000 மற்றும் $300,000 என்ற அளவை விட கிரீட மோதிரத்தை வென்ற ஏலத் தொகையானது அதிகமாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது, இது இதுவரை விற்கப்பட்ட ஹிப்-ஹாப் கலைப்பொருள்களிலேயே மிக அதிக விலைக்கு விலை போன கலைப் பொருளாக மாறியுள்ளது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கத்தால் சூழப்பட்ட மோதிரத்தின் மையத்தில் கபோகான் ரூபி(cabochon ruby) வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
1996 ல் உயிரிழந்த ஷகுரின்
அமெரிக்காவில் பிறந்த ராப் பாடகர் டுபல் ஷகுரின் லாஸ் ஏஞ்சல்ஸில் அடையாளம் தெரியாத நபர்களால் அவருடைய 25வது வயதில் செப்டம்பர் 13ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
AFP
ஷகுரின் 1996ம் ஆண்டு செப்டம்பர் 4ம் திகதி MTV விருது வழங்கும் கலந்து கொண்டு இருந்த போது இந்த கிரீட மோதிரத்தை கடைசியாக அணிந்து வந்தார்.
இந்த மோதிரத்தில் அவரது காதலி கிடாடா ஜோன்ஸைக் குறிக்கும் வகையில் ”Pac & Dada 1996" என்று பொறிக்கப்பட்டுள்ளது. ராப் பாடகர் டுபல் ஷகுரின் இந்த மோதிரத்தை அவரது மகள் ஏல விற்பனைக்கு வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |